1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (09:26 IST)

உலக சினிமா ரசிகர்களைக் கலக்கிய ‘மணி ஹெய்ஸ்ட்’…. கொரியன் ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகம் முழுக்க உள்ள திரைப்பட ரசிகர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டது மணி ஹெய்ஸ்ட் சீரிஸ்.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். சமீபத்தில் வெளியான ஐந்தாவது சீசன் மூலம் முழுவதும் நிறைவுற்றது. இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்த சீரிஸை கொரியன் மொழியில் ரீமேக் செய்துள்ளது. இதன் வெளியீடு ஜூன் 24 ஆம் தேதி என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.