வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:36 IST)

'நேர் கொண்ட பார்வை ரிலீஸ்: முதல் காட்சியில் குவிந்த பிரபலங்கள்

அஜித் நடித்த 'நேர்கொண்டபார்வை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. குறிப்பாக சென்னையில் இன்று காலை 4 மணி காட்சியாக சென்னை ரோகிணி திரையரங்கில் ரிலீஸான போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்கள் மட்டுமன்றி இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் இந்த திரையரங்கில் 'நேர்கொண்டபார்வை' திரைப்படத்தை பார்த்தனர் 
 
குறிப்பாக 'நேர்கொண்டபார்வை' படத்தின் நாயகி ஷராதா ஸ்ரீநாத், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, ரங்கராஜ் பாண்டே மற்றும் படக்குழுவினர் அனைவரும் இந்த படத்தை இன்று அதிகாலை 4 மணி காட்சி பார்த்தனர். திரையில் அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியின்போதும், அவர் வசனம் பேசும் ஒவ்வொரு வசனத்தின்போதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை நட்சத்திரங்கள் ரசித்துப் பார்த்தனர் 
 
ஏற்கனவே இந்த படத்தின் பத்திரிகை காட்சிக்கு பின் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த  நிலையில் இன்றைய முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்களின் விமர்சனங்கள் விண்ணைத்தொடும் அளவிற்கு இருந்தது. இதுவரை படம் பார்த்த ஒருவர் கூட நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் பெண்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்றும், பெண்கள் மீது தவறான எண்ணம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்த்தவுடன் மனம் மாற வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து கூறினர். மேலும் 'பிங்க்' படத்தையும் 'நேர் கொண்ட பார்வை' படத்தையும் பார்த்தவர்கள் கருத்துக் கூறும்போது 'அமிதாப்பை விட அஜித் சிறப்பாக நடித்திருப்பதாகவும் 'பிங்க்' படத்தைவிட இந்த படம் பெட்டராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒருசில அரைவேக்காட்டு விமர்சகர்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் நாள் முதல் காட்சியிலேயே அதிக அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் இந்தப் படம் விஸ்வாசம் படத்தை விட சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது