நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்திற்கு வெற்றி விழாவா? கலாய்க்கும் ரசிகர்கள்

Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (21:15 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு'. இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் கடுமையான விமர்சனத்தால் மூன்று நாட்கள் கூட நல்ல வசூலை பெறவில்லை. தற்போது பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இந்த படம் தூக்கப்பட்டுவிட்டது.
இந்த படத்தை உண்மையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கவில்லை என்றும் யூடியூபில் உள்ள குழுவினர்களே இந்த படத்தை தயாரித்ததாகவும், படத்தை விளம்பரம் செய்ய சிவகார்த்திகேயன் அனுமதியுடன் அவரது பேனரை பயன்படுத்தி கொண்டதாகவும் ஒருசிலர் கோலிவுட்டில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் கூட உருப்படியாக ஓடாத ஒரு படத்திற்கு வெற்றி விழாவா? என்று நெட்டிசன்கள் ஒருபக்கம் கலாய்த்து வந்தாலும் வெற்றி விழாவில் பேசிய அனைவரும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல் பில்டப் கொடுத்தது படத்தை விட காமெடியாக இருந்தது
கோலிவுட் திரையுலகில் திரைப்படம் வெளியாகி இரண்டே நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் வழக்கம் தொடர்ந்து வருவதால் உண்மையான வெற்றி பெற்ற படம் எது? என்பதே பலருக்கு தெரியாமல் போகிறது


இதில் மேலும் படிக்கவும் :