ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (20:23 IST)

உடைகிறதா நெல்சன் யோகி பாபு கூட்டணி… இதுதான் காரணமாம்!

நெல்சன் இயக்கிய அனைத்துப் படங்களிலும் யோகி பாபு முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தபடத்தில் ரஜினியோடு வடிவேலு நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வடிவேலுவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை அவர் நடிக்க சம்மதித்துவிட்டால் அந்த படத்தில் நெல்சனின் ஆதர்சமான நகைச்சுவை நடிகரான யோகி பாபு நடிக்க முடியாமல் போகும் சூழல் உள்ளது. நெல்சன் இயக்கிய அனைத்துப் படங்களிலும் யோகி பாபு நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் அந்த கூட்டணி உடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.