1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: சனி, 21 ஜூன் 2014 (13:18 IST)

கூலிப் படையினர் குறித்த படம், 'நீயெல்லாம் நல்லா வருவடா'

கடந்த இருபது வருடங்களில் சென்னையைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் நட்புக்காகக் கொலை, ஜாதிக்காகக் கொலை, ரவுடிக்காகக் கொலை, அரசியலுக்காகக் கொலை எனப் பல நோக்கங்களுக்காகக் கூலிப் படைகளை ஏவிக் கொலை செய்ய, சென்னையில் மட்டும் பணம் என்ற ஒரே காரணத்திற்காகக் கூலிப் படையினர் கொலை செய்கின்றனர். 
 
நான் யாரால், எதற்காகச் சாகிறேன் என்று கூலிப் படையினரால் கொல்லப்படுபவனுக்கும், தான் எதற்காக இன்னோர் உயிரைப் பலி வாங்குகிறேன் என்று கொல்பவனுக்கும் தெரிவதில்லை.
 
கூலிப் படையினர் குறித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உருவாகும் படமே "நீயெல்லாம் நல்லா வருவடா" 
 
எஸ்.ஜி. பிலிம்ஸ் (S.G. Films Pvt Ltd) மற்றும் கிளாப் சினிமாஸ் (Clap Cinemas) என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இனணத்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 
 
இப்படத்தில் விமல், சமுத்திரக்கனி, அமிர்தா, பார்பி ஹண்டா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
 
படத்னத இயக்குபவர் ஆர். நாகேந்திரன். தம்பி மற்றும் வாழ்த்துகள் ஆகிய படங்களில் இயக்குநர் சீமானுடனும் திருட்டுப் பயலே, கந்தசாமி, ஷார்ட் கட் ரோமியோ (ஹிந்தி) ஆகிய படங்களில் இயக்குநர் சுசி கணேசனுடனும் இணைந்து பணியாற்றியவர்.
 
படத்திற்கு இசை, ஜி.வி. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - என்.கே. ஏகாம்பரம், பாடல் வரிகளை நா.முத்துக்குமார், சினேகன், லலிதானந்த் எழுதுகிறார்கள்.
 
படம், நல்லா வரும் என்று எதிர்பார்ப்போம்.