வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:57 IST)

நயன்தாராவின் ''அன்னப்பூரணி'' பட புதிய அப்டேட்

nayanthara 75 anapoorani
நயன்தாரா 75 வது படமான  அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் திருமணத்துக்குப் பிறகு நடித்த  கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில்  நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா 75 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நயன்தாரா 75 வது பட  தலைப்பு  வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அன்னப்பூரணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரரோவாக  ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், ஜீ ஸ்டுடியோ நிறுவனம்  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.