திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:50 IST)

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....

நேற்று காதலர் தினம் காதலர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் காதலர் தின வீடியோக்களும், அதனை எதிர்த்து சிங்கிள்சின் ட்ரோல் வீடியோக்களும் கலைக்கட்டியது. 
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்பட்ம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
வழக்கமாக விக்னேஷ் சிவந்தான் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை டிவிட்டரில் வெலியிடுவார். ஆனால், இந்த முறை இந்த புகைப்படத்தை நயன்தாராவே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரொமாண்டிக் லுக்கில் இருக்கின்றனர். இருவரது உடையிலும் அவர்களது பெயரின் முதல் எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.