ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (07:53 IST)

ஹிட்டே இல்லை என்றாலும் சம்பளத்தை ஏற்றிய நயன்தாரா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். ஆனால் திருமணம் ஆனதில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த கனெக்ட், கோல்ட், O2 போன்ற படங்கள் அட்டர் பிளாப் ஆனது. 

இப்போது நயன்தாரா 75 மற்றும் O2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஹிட்டே கொடுக்கவில்லை என்றாலும், தற்போது தன்னுடைய சம்பளத்தை அவர் 2 கோடி ரூபாய் உயர்த்தி 12 கோடியாக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கிறாராம்.

இதற்கிடையில் அவர் நடிக்கும் நயன்தாரா 75 படத்தின் ஷூட்டிங் திருச்சியில் திட்டமிட்ட போது அவர் வெளியூருக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வர முடியாது என சொல்லிவிட்டதாகவும், அதற்காக படக்குழு சென்னையிலேயே அவரை வைத்துக் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.