வெங்கட்பிரபுவுடன் இணையும் நயன்தாரா: நாளை டிரைலர்
வெங்கட்பிரபுவுடன் இணையும் நயன்தாரா: நாளை டிரைலர்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த படத்தின் டிரைலரை நாளை வெங்கட்பிரபு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை நயன்தாரா நடித்த திரைப்படங்களில் ஒன்று நிழல். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் மலையாள திரையுலகில் வெளியானது என்பதும் இந்த படம் சுமாரான ரிசல்ட்டை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டப்பிங் மாய நிழல் என்ற டைட்டிலில் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட ஒப்புக் கொண்டுள்ளார். நாளை இந்த படத்தின் டிரைலரை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நடிக்கும் திரைப்படம் ஒன்றின் ட்ரெய்லரை வெங்கட்பிரபு வெளியிடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.