நயன்தாரா செய்ய போகும் நரி வேலை என்னான்னு தெரியுமா?


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
தனக்கு வயதாகி கொண்டிருப்பதை உணர்ந்த நயன்தாரா தற்பொது மலையாளத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

 

 
தற்போதைக்கு தமிழ் சினிமா நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நயன்தாரா. தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும் இன்னும் அவருக்கான மார்க்கெட் குறையவில்லை. பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவரும் சற்றும் அசராமல் சம்பளத்தை கூட்டிக்கொண்டே செல்கிறார். அண்மையில் 50 வினாடி விளம்பரம் ஒன்றில் நடிக்க ரூ.5 கோடி வாங்கியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
 
இந்நிலையில் இவர் தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பின் மலையாளத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். தனக்கு வயதாகி கொண்டிருப்பதை உணர்ந்த நயன்தாரா தமிழ் சினிமாவில் இன்னும் சில ஆண்டுகள்தான் நடிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளார். மலையாளத்தில் அப்படி இல்லை. 
 
காவ்யா மாதவன், மஞ்சு வாரியர் போன்ற நடிகைகளுக்கு இன்னும் மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். மேலும் இவர் டாப்பில் இருந்தபோது மலையாளத்தில் இருந்து வாய்ப்புகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :