வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (21:43 IST)

இன்ஸ்டாவில் 1 மில்லியன் பாலோயர்ஸை கடந்த நயன்தாரா

nayanthara with two Children
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு உலக், உயிர் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில்,  நடிகை நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் இல்லாத நிலையில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் தனது இரண்டு குழந்தைகளை இரண்டு கைகளில் வைத்தபடி நடந்து வரும் வீடியோவை  வெளியிட்டிருந்தார். பின்னணியில் ஜெயிலர் படத்தில் அலப்பறை தீம் பாடல் உள்ள இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், 10 மணி நேரத்தில் 1 மில்லியர் பாலோயர்ஸ்ஸை இன்ஸ்டாவில் கடந்துள்ளார் நயன்தாரா.