வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:23 IST)

ஸாரி கைய்ஸ், நடிக்க முடியாது - நழுவிய நயன்தாரா

ப்ரூஸ் லீ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் அல்லவா. அந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோ‌டியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருந்தனர். ஜீ.வி.க்கு நயன்தாராவைவிட இரண்டு வயது குறைவு. ஆனாலும், ஆசை யாரைவிட்டது?


 

 
இளம் நடிகர்களுடன் நடிக்கலாம். அதற்காக டார்லிங் என்ற ஒரேயொரு சுமார் படத்தில் நடித்தவருடன் இறங்கி வந்து நடிக்க வேண்டுமா என்று நயன்தாராவுக்கு யோசனை. அதனால், ஸnரி, முடியாது என்று மறுத்திருக்கிறார்.
 
இப்போது வேறு நடிகையை தேடி வருகிறார்கள். 
 
இந்தப் படத்துக்கு, பாட்ஷா என்கிற ஆண்டனி என்று முதலில் பெயர் வைத்தனர். பாட்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ப்ரூஸ் லீ என்று பெயரை மாற்றினர். 
 
பாட்ஷா, நயன்தாரா... றெக்கை முளைக்கிறதுக்குள்ள பறக்கிற ஆசையா?