1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: புதன், 31 மே 2017 (12:35 IST)

ஹீரோவுக்கு அக்காவாக நடித்த நயன்தாரா!!

'இமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு அக்காவாக நடித்துள்ளாராம் நயன்தாரா.


 
 
‘டிமாண்டி காலனி’ படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்துள்ளார். 15 வருடங்களாக ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நயன், தற்போது ஹீரோவுக்கு அக்காவாக நடிப்பதோடு, 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். அதர்வா டாக்டராகவும், நயன்தாரா பெங்களூரைச் சேர்ந்த சிபிஐ அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.