செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:54 IST)

நயன்தாராவுக்கு 2019 ல் மட்டும் இதனை படங்களா! - பொறாமைகொள்ளும் சகநடிகைகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தனது வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்துவந்தவர் தற்பொழுது நயன்தாரா சினிமா வாழக்கை வேறு பர்சனல் வாழக்கை வேறு என பிரித்து சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
கொஞ்சம் கேப் கிடைத்தால் போதும்  தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செல்வார், இந்த நிலையில் விஜய் - அட்லி இணையும் படத்தில் நயன்தாரா கமிட் ஆகியுள்ளார், இந்த படம் மட்டும் இல்லாமல் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து 10 படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கிறது. இதோ அதன் லிஸ்ட்
 
அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரே நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் ட்ராமா, சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படம், ஐரா, கொலையுதிர் காலம், இளம் இயக்குனருடன் பெயரிடப்படாத படம், அறம்-2, இந்தியன்-2 ( இன்னும் அறிவிக்கப்படவில்லை ) மற்றும் விஜய்-63
 
இதனை படங்களை தனது கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.