புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (21:43 IST)

நயன்தாராவின் 'நிழல்' பட டிரைலர் ரிலீஸ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா இவர் நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டீசர் தற்போது ரிலீசாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா   இவர் தற்போது இவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டுகாதல்’ என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தின் இவர்களுடன் இணைந்து நடிகை சமந்தாவும் நடித்துவருகிறார்.
 

இப்படத்தில் நடித்துவரும் அதேசமயம் ரஜினியின் அண்ணாத்த மற்றும் மலையாளத்தில் நிழல் போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்துவருகிறார்.

மலையாளத்தில் உருவாகிவரும் படம் நிழல். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். அப்பு பட்டாதிரி என்பவர் இப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி இணையதளத்தில் பரவலாகி வருகிறது.  நயன்தாரா என்ற பெயரில் டுவிட்டரில் ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

கேரளாவில் தற்போது இரவு நேரக் காட்சிக்கு அனுமதியில்லை; வரும் ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் இரவு காட்சிக்கு அனுமதி கிடைத்துவிட்டால் இப்படம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்