1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2017 (15:04 IST)

வயதான ஹீரோவுடன் நடிக்க ரூ.4 கோடி கேட்ட நயன்தாரா

தெலுங்கு மாஸ் நடிகர் பாலகிருஷ்ணாவின் 102வது படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.


 

 
தெலுங்கு மாஸ் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா 100 படங்களை கடந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது 102வது படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தமிழில் கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே இரண்டு படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் 3வது படம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், படக்குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.