வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (09:01 IST)

தனி விமானத்தில் கொச்சின் சென்ற விக்னேஷ் - நயன் தாரா: வைரல் புகைப்படங்கள்!

தனி விமானத்தில் கொச்சின் சென்ற விக்னேஷ் - நயன் தாரா: வைரல் புகைப்படங்கள்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் தனி விமானத்தில் கொச்சிக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கொச்சி விமான நிலையத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் இருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் மற்றும் காரை நோக்கி செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் தான் நடக்கப் போகிறது என்று ஏற்கனவே செய்தி வெளியானது. இதனை அடுத்து இந்த படப்பிடிப்பிற்காக இருவரும் கொச்சி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே