வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (06:23 IST)

என்னை திட்டாதீங்க, அது வெறும் நடிப்பு தான்: ‘கர்ணன்’ பட நடிகர் டுவிட்!

என்னை திட்ட வேண்டாம், அது வெறும் நடிப்புதான் என தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட் ஒன்றை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் தனுஷை அடுத்து அனைவரின் கவனத்தை பெற்றது நட்டி நடராஜ் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவருடைய அபாரமான நடிப்பு, குறிப்பாக அவர் போலீஸ் ஸ்டேஷனில் செய்யும் அட்டகாசமான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவரது நடிப்பை உண்மை என நினைத்துக்கொண்டு தனுசை அவர் கொடுமைப்படுத்தியதாக பலர் தனுஷ் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது:
 
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி...