திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:41 IST)

”உங்க வயித்துல என்ன தழும்பு”…. ரசிகரின் கேள்விக்கு நந்திதாவின் பதில்!

நடிகை நந்திதா தமிழில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.  சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ”நந்திதாவின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி உங்கள் வயிற்றில் என்ன தழும்பு இருக்கிறது” எனக் கேட்டிருந்தார் .

அதற்கு பதிலளித்த நந்திதா “என் வயிற்றில் இருக்கும் தழும்பு பற்றி கேட்பவர்களுக்கு. நான் ஜட்ஜாக இருக்கும் ஷோவுக்காக ஒரு நாளைக்கு 6 மணி முதல் 7 மணிநேரம் வரை உட்கார்ந்திருக்கிறேன். அப்போது நேரம் கிடைத்தால் இதுபோன்ற போட்டோக்களை எடுக்கிறேன். அது என்னுடைய ஸ்கர்ட் லைன் மார்க். அது தையலோ அல்லது வேறு ஏதாவது தழும்போ இல்லை. அப்படியே இருந்தாலும் அதனால் பிரச்சனை இல்லை.” எனக் கூறியுள்ளார்.