வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (12:12 IST)

நலன் இயக்கத்தில் வடிவேலு… ரசிகர்களைக் கவர்ந்த காமெடி கௌபாய் போஸ்டர்!

நலன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் காமெடி கௌபாய் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு 2011 க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீம்ஸ் இல்லாத நாட்களே தமிழர்களுக்கு இல்லை என்ற அளவில் சமூகவலைதளமெங்கும் அவர் முகமே இருக்கிறது. இந்நிலையில் இப்போது அவர் சூதுகவ்வும் புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் காமெடி கௌபாய் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்துக்காக ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்க உள்ளதாக அந்த போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இந்த போஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள் உருவாக்கும் பேன் மேட் போஸ்டராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.