வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (12:31 IST)

நையப்புடை வித்தியாசமான படம் - தயாரிப்பாளர் தாணு

ரஜினி, விஜய் நடிக்கும் படங்களை ஒரேநேரத்தில் தயாரித்துவரும் தாணு, பா.விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் நையப்புடை என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இது குறித்து பேசிய தாணு,


 
 
"ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் நையப்புடை. இயக்குனர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம்" என்று கூறினார்.