1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (19:29 IST)

காங்கிரஸ் விரிக்கும் வலையில் கமல் சிக்குவாரா?

பாஜகவுக்கு எதிராகப் பேசிவரும் கமல், காங்கிரஸ் விரிக்கும் வலையில் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாகக் குரல் கொடுத்து வருகிறார் கமல். எனவே, அவரைத் தங்கள் பக்கம் இழுத்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டம் தீட்டி வருகிறது. அதனால்தான், நேற்று கமலைச் சந்தித்துப் பேசினார் நடிகை நக்மா.

 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு செயலாளராக இருக்கும் நக்மா, கமலுடன் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று சொல்லப்பட்டாலும், அரசியல் ரீதியாகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது என அனைவருக்குமே தெரியும். காங்கிரஸ் விரித்துவரும் வலையில் சிக்குவாரா கமல் என பொறுத்திருந்து பார்ப்போம்.