திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (09:15 IST)

நானே வருவேன் உண்மை வசூல்… தாணுவின் போலி விளம்பரங்களை போட்டுடைத்த சினிமா பிரபலம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆனது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக படத்துக்கு மிகப்பெரிய வசூல் இல்லை. ஆனால் பட தயாரிப்பாளர் தாணு தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் இருந்து மட்டும் சுமார் 50 லட்சம் தனக்கு ஷேர் வருமென்று பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார்.

இந்த தகவல் 200 சதவீதம் பொய் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.