திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (12:15 IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை; நாகினி புகழ் நடிகர் கைது!

பிரபலமான நாகினி சின்னத்திரை நாடக நடிகர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2013ம் ஆண்டில் தில் கி நசர் சே கூப்சூரத் என்ற இந்தி நாடகம் மூலம் அறிமுகமானவர் பேர்ல் வி பூரி. பல்வேறு இந்தி நாடகங்களில் நடித்துள்ள இவர் நாகின் என்ற இந்தி நாடகத்தின் 3வது பாகத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வி பூரியும், அவர்களது நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி மற்றும் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாகினி சீரியலில் நடித்து வரும் நடிகை அனிதா ஹசானந்தனி, தனக்கு வி பூரியை நன்றாக தெரியும் என்றும், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.