ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (07:18 IST)

மிஷ்கின் சாருக்கு இனிமே படம் இயக்குவதற்கு நேரமே இருக்காது... சிவகார்த்திகேயன் பேச்சு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கினை புகழ்ந்து தள்ளினார். அவரது பேச்சில் “மிஷ்கின் சார் அளவுக்கு என்னை சினிமாவில் கொஞ்சியவர்கள் யாருமே இல்லை.  அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் நாளே அவர் படங்களை எல்லாம் பார்த்து விடுவேன்.

அவர் பேசும் தோரணையை பார்த்து அவரிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என நினைத்துக் கொள்வேன். ஆனால் அவர் மிகவும் இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இந்த படம் ரிலீஸானால் அவருக்கு படம் இயக்கவே நேரம் இருக்காது. அந்த அளவுக்கு நடிக்க வாய்ப்புகள் வரும்” எனப் பேசியுள்ளார்.