1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (07:56 IST)

படங்களை கருணையோடு பார்க்கவேண்டும்… சூர்யாவைப் பாதுகாக்க வேண்டும் – இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

சூர்யா நடப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் என்றால் படத்தின் மோசமான உருவாக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தைக் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின் “இப்போதெல்லாம் ரசிகர்கள் அதிகப்படியான கோபத்துக்கு ஆளாகிறார்கள். படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும். நான் குறிப்பிட்டு கங்குவா படத்தைப் பற்றிதான் சொல்கிறேன். சூர்யா ஒரு நல்ல நடிகர். அவரை நாம் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.