Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை நடிகையாக பார்க்காமல் ஒரு பெண்ணாக பாருங்கள்: கதறும் மைனா நந்தினி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:48 IST)
என்னை நடிகையாக பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக வாழ விடுங்கள் என மைனா நந்தினி உருக்கமாக கூறியுள்ளார்.

 

 
சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கார்த்திக் தற்கொலைக்கு நந்தினி தான் காரணம் என கார்த்திக் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
இதுகுறித்து நந்தினி கூறியதாவது:-
 
காதலித்து திருமணம் செய்தது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு. ஆரம்ப காலத்தில் சந்தோஷமாக இருந்தேன். கடந்த 3 மாதமாக அவரது அன்பு குறைய ஆரம்பித்தது. இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் விலகி இருந்தேன். 
 
அவருடைய திடீர் மரணம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. அவரது பெற்றோர் என் மீது சுமத்து குற்றங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எல்லா அவமானங்களையும் சந்தித்து விட்டேன். 
 
என்னை நடிகையாக பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக இருக்க விடுங்கள், என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :