இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார் இதுதான். விக்னேஷ் சிவன் பெருமிதம்

sivalingam| Last Modified செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (05:25 IST)
'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன், கடந்த ஆண்டு வெளீவந்த 'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் இந்த படத்தால் அவர் நயன்தாராவின் காதலையும் பெற்றதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் நெடுநாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறியுள்ளதாம். திரையுலகில் நுழையும் ஒவ்வொருவருக்கும் ரஜினியுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறைந்தபட்சம் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். விக்னேஷ் சிவனுக்கும் அந்த ஆசை இருந்தது வியப்பில்லை. இந்த ஆசை நேற்று அவருக்கு நிறைவேறியுள்ளது. ஆம் நேற்று விக்னேஷ் சிவன் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததோடு அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்தபோது, 'இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :