புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (18:59 IST)

'எவ்ளோ திமிரு இருந்தா என் கதையை திருடி திமுரு பிடிச்சவன் எடுப்பிங்க ...?

தமிழ்நாடு அறிந்த பிரபல கதாசிரியர் மற்றும் கிரைம் நாவலாசிரியரான ராஜேஷ்குமார்.அவர் எராளமான நாவல்கள் எழுதியுள்ளார். எல்லாம் ராக்கெட் வேகத்தில் விற்று தீர்ந்து விடும். அவருடைய எழுத்துக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் நேற்று ரிலீசான விஜய் ஆண்டனி நடித்த திமிறு பிடிச்சவன் படம் என்னுடைய கதைக்கருவை திருடி எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ராஜேஷ்குமார் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
 
’கடந்த வருடம் நான் ஒன் + ஒன் = ஜீரோ தொடர்கதையாக ஒன் இந்தியாவில் எழுதினேன்.  அதாவது 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை மூளைச்சலைவை செய்து தமக்கு ஆகாதவர்களை கொலை செய்ய வைத்து சமூக விரோதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இவ்வாறு அதில் எழுதியிருந்தேன். அதே கருவை அப்படியே காப்பியடித்து திமிரு பிடிச்சவன் படத்தை எடுத்துள்ளனர்.’இவ்வாறு ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.