வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (17:12 IST)

என் வாழ்க்கையே 15நாளில் மாறிவிட்டது: அஜித் குறித்து நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் அஜித் நடிக்கும் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.


 
இந்த படத்தில் அஜித்துடன், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இவர் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லைன்னா நயன்தாரா, சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே மார்க்கெட்டி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை'  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமானார். இந்நிலையில் அஜித்துடன் ஷுட்டிங்கில் பிசியாக இருக்கும ஆதிக், தல அஜித் தொடர்பாக நெகிழ்ச்சியான டுவிட் பதிவினை தெரிவித்துள்ளார். 
 


அந்த பதிவில், "அஜித் சாருடன் நடிக்கும் இந்த தருணம் என் வாழ்க்கையில் உணர்வுபூர்வமான தருணம். சூப்பர் ஸ்டார் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் 15 நாட்களாக நடித்து வருகிறேன். இந்த 15 நாட்கள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.  இதற்கு அஜித் சார் தான் காரணம். எனக்கு வாய்ப்பளித்த அஜீத் சார், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.