1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (22:00 IST)

எனது ஃபேஸ்புக் கணக்கை’ ஹேக்’ செய்துவிட்டனர் – பிரபல நடிகர்

பிரபல நடிகர் அனுப் மேனன் தனது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேஸ் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி திரைக்கதை ஆசிரியாகவும்,  நடிகருமான இருப்பவர் அனுப் மேனன். இவர் பல்வேறு படங்களில் திரைக்கதை அமைப்பிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.            

இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இவரை சுமார் ஒன்றை மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்நிலையில் இவர் தனது ஃபெஸ்புக் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அனுப் மேனன் கூறியுள்ளதாவது: எனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளனர். எனது விவரங்களை நீக்கிவிட்டு சில விளையாட்டு வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து நான் போலீசில் புகாரளித்துள்ளேன்… விரைவில் என் ஃபேஸ்புக்  கணக்கை திரும்பப் பெருவேன்  எனத் தெரிவித்துள்ளார்.