1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:15 IST)

முதல்வன் இரண்டாம் பாகத்தில் விஜய்? முக்கிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், தமிழக முதல்வர் வேடத்தில் நடித்த படம் முதல்வன். இந்த படத்தில் சாதாரண பத்திரிக்கையாளராக இருக்கும் அர்ஜுன், முதல்வராகமாறுவார். இதுதான் கதையின் ஒன்லைன். 



இதில் அர்ஜுன்க்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் ஹிட்டானது. இந்த படத்தில் முதலில் விஜய் உள்பட பலரிடம் கேட்கப்பட்டு கடைசியில் அர்ஜுன் நடித்தார்.
 
இந்நிலையில்,தமிழில் வெற்றிகரமாக ஓடிய பல படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. அந்த வகையில், . ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. இப்போது இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்க தயாராகிறார். தேவர் மகனின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது.
 
சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தன. விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியது.  முதல்வன் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது.
 
இந்தியன்-2 படத்தை முடித்ததும் முதல்வன்-2 பட வேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்று தெரிகிறது.
 
டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.