1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Updated : செவ்வாய், 23 மே 2017 (15:14 IST)

உச்ச நட்சத்திரத்தின் படத்தை விமர்சித்த இசைப்புயல்

உச்ச நட்சத்திரம் நடித்த படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லையென்று விமர்சித்துள்ளார் இசைப்புயல்.


 

 
கடந்த மாதம் வெளியான பிரமாண்டமான படம், உலகையே இந்திய சினிமா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 1500 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ள இந்தப் படம், விரைவில் 2000 கோடி ரூபாயைத் தொடும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த இசைப்புயல், பயங்கரமாகப் பாராட்டியுள்ளார்.
 
உச்ச நட்சத்திரம் நடித்த அனிமேஷன் படமும் இதுமாதிரி பெரிய அளவில் ஹிட்டாகியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள இசைப்புயல், அந்தப் படத்தில் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் படத்தில் அவை சிறப்பாக இருந்ததாகவும், கிராஃபிக்ஸ் பணிகளை சரியாக செய்திருக்கும் முதல் படமும் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். உச்ச நட்சத்திரத்தின் படத்தைப் பற்றி இசைப்புயல் இப்படி வெளிப்படையாக விமர்சித்தது, கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் படத்தின் இசையமைப்பாளரும் அவர்தான்.