வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:49 IST)

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல இசையமைப்பாளர்: பிளாஸ்மா தானம் செய்தார்

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல இசையமைப்பாளர்
கொரனோ வைரஸிலிருந்து நீண்ட பிரபல இசையமைப்பாளர் தனது மகனுடன் சேர்ந்து மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி. இவருக்கு சமீபத்தில் கோரண பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இவரது மகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் சிகிச்சை பெற்று தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர் 
 
இந்த நிலையில் எம்எம் கீரவாணி தனது மகனுடன் பிளாஸ்மா தானும் செய்துள்ளதாகவும் இது இரத்த தானம் செய்வதை போன்று மிகவும் எளிமையானது என்றும் எனவே பிளாஸ்மா தானம் செய்ய யாரும் பயப்படவேண்டாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு இசையமைத்து வரும் எம்.எம்.கீரவானி விரைவில் தனது வழக்கமான பணியை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது