வழுக்கி வாரிய அதுல்யாவை ஓடிவந்து கட்டியணைத்த சாந்தனு - வீடியோ!
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாந்தனுவுக்கு அதன் பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவது குறித்த செய்திகள் ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடித்துள்ளார். மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 10ல் திரையிடப்படவுள்ளது. ஜாலியான இந்த படத்தை பார்த்து உங்கள் மன அழுத்தத்தை போக்குங்கள் என கூறி ரொமான்டிக் வீடியோ காட்சியின் மேக்கிங் வீடியோவை சாந்தனு வெளியிட்டுள்ளார். அதுல்யா - சாந்தனுவின் ரொமான்டிக் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது.