வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (12:28 IST)

நடிகை ரியா முன்ஜாமீன் மனு: மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி அதன் பின்னர் திடீரென போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை அடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சற்று முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே கடந்த புதன்கிழமை ரியா சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினத்தில் அவரது வழக்கறிஞர் முன்ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார் 
 
இதனையடுத்து தற்போது மீண்டும் ரியாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நடிகை ரியாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது