வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (14:11 IST)

மும்பையில் வீடு வாங்கிய மிருணாள் தாகூர்! இத்தனை கோடியா?

Mrunal Thakur
பிரபல இந்தி நடிகை மிருணாள் தாகூர். இவர் தொலைக்காட்சி தொடர் வழியே சினிமாவில் நுழைந்தார்.
 
இவர். அன்பு சோனியா,  சூப்பர் 30,  பேய் கதைகள், தமாகா, ஜெர்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
 
இதையடுத்து, சீதா ராமம் என்ற படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
இந்த நிலையில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் மிருணாள் தாகூர், தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்,  நடிகை மிருணாள் தாகூர், மும்பையில் 10 கோடி ரூபாய் மதிப்பில்  வீடு வாங்கியுள்ளார். பிரபல நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து, அவர் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகவும் இந்த இரண்டு வீடுகள் அருகருகே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், மிருணாள் தாகூர் அவரது தந்தையுடன் இணைந்து அந்த வீடுகளிய கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துகொண்டதாகவும், இவ்விரு வீடுளும் 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.