வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : சனி, 14 அக்டோபர் 2017 (20:46 IST)

ஆபாச இணையதளத்தின் பெயரில் வெளியாகும் படம்

ஆபாச இணையதளமான ‘எக்ஸ் வீடியோஸ்’ பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது.


 
 
சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’. படத்தின் பெயர்தான் ஏடாகூடமாக இருக்கிறதே தவிர, படத்தில் சொல்லப்பட்ட கருத்து ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. அப்படியென்ன கருத்து என்கிறீர்களா? ஆபாசப் படங்களே வேண்டாம் என்பதுதான் இந்தப் படத்தின் கருத்து.
 
எத்தனையோ ஆபாசப் படங்களைப் பார்க்கிறோம். அவற்றில் எல்லாம் யார் யாரோ நடிக்கிறார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த ஒருவர் அந்த வீடியோவில் இருந்தால் எப்படி இருக்கும்? அந்த பாதிப்பில்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சஜோ சுந்தர். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டித் தரப்போகிறாராம்.