செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 மார்ச் 2018 (18:10 IST)

நாங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று நினைக்கின்றேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை

இந்த தலைமுறை நடிகைகள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

ஹாலிவுட்டில் 40 வயதில் கூட நடிகைகள் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவிலும் குஷ்பு, ரேவதி, ரோஜா போன்ற் நடிகைகள் நாயகிகளாக இருந்தபோது அவர்களது கேரக்டர்கள் வலுவாக இருந்தது

ஆனால் இன்றைய திரைப்படங்களில் நாயகிகள் பெரும்பாலும் நடனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். அருவி' மாதிரி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அதிகம் உருவாக்கப்படவேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.