வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (13:36 IST)

யாரு அம்மன் வேடம் போடனும்கிற வெவஸ்தை இல்ல - கிண்டலடித்தவருக்கு ஆர். ஜே பாலாஜி பதிலடி!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் அவதாரமெடுத்து மூக்குத்தி அம்மன் படத்தில் என்ற படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை தயாரித்துள்ளது.  வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர். 
 
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர். 
ஆனால், ஒரு சிலருக்கு ஒரு நடிகையாக நயன்தாரா அம்மன் வேடமிட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தவகையில் இணையவாசி ஒருவர் இந்த போஸ்டரை கண்டு ‘ யாரு அம்மன் வேடம் போடனும்கிற கூறுபாடு இல்லாம போச்சு இந்த கூமுட்டைகளுக்கு’ என்று பதிவிட்டிருந்தார். அந்த நபருக்கு ரிப்ளை செய்த ஆர்.ஜே. பாலாஜி, துரை ராஜ்... உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கனும் என்று கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.