மகளுக்கு நடிப்பு சொல்லித்தரும் பிரபல இயக்குனர்!
மகளுக்கு நடிப்பு சொல்லித்தரும் பிரபல இயக்குனர்!
பிரபல இயக்குனர் ஒருவர் மகளுக்கு நடிப்பு சொல்லித் தரும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
மூடர் கூடம் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நவீன். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அக்ஷராஹாசன் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் நவீன் தனது மகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து கொடுத்ததாகவும் தான் சொல்லிக் கொடுத்ததை தனது மகன் உற்சாகமாக கவனித்துக் கொள்வதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது
என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது. ஒரு தேர்ந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன்.