"ஓட ஓட விரட்டும் எலி" மான்ஸ்டர் பட டீசர் !

Last Modified வியாழன், 2 மே 2019 (19:51 IST)
எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்  படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. 


 
‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை  மாயா, மாநகரம் போன்ற படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
இந்நிலையில் மே 17-ந் தேதி  திரைக்குவரவிருக்கும்  இப்படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியானது.இதில் மேலும் படிக்கவும் :