வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (10:04 IST)

மோகன்லால் படத்திற்கு திடீர் தடை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mohanlal
நடிகர் மோகன்லால் நடித்த திரைப்படம் ஒன்று வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவான மான்ஸ்டர் என்ற திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு கேரளாவில் மூன்று நாட்களுக்கு முன் பதிவு முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஓரினசேர்க்கை காட்சிகள் இருப்பதால் இந்த படத்தை தடை செய்வதாக வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
 
மோகன்லாலின் திரைப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும், பல கோடிகளை வசூல் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளதால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஓரினச்சேர்க்கையாளர் காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவிற்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva