தனுஷூடன் இணைந்தார் மோகன்லால்

dhanush mohanlal" width="600" />
sivalingam| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (05:39 IST)
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பு மட்டுமின்றி திரைப்பட விநியோகிஸ்தராகவும் இருந்து வருகிறார். அவருடைய ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் பல பெரிய பட்ஜெட் தமிழ், மலையாள படங்களை கேரளாவில் வெளியிட்டு வருகிறது.


 
 
இந்த நிலையில் தனுஷின் 'விஐபி 2' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மோகன்லாலில் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை அவர் மேக்ஸ் லேப் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 200 திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
 
இந்த மேக்ஸ்லேப் நிறுவனத்திலும் மோகன்லாலுக்கு பங்கு உண்டு என்பதும் இந்த நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய்யின் 'ஜில்லா' உள்பட பல திரைப்படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :