திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (12:04 IST)

மோகன் லால் ஜீத்து ஜோசப் கூட்டணியின் அடுத்த படம்… நேரடி ஓடிடி ரிலீஸ் … செம்ம அப்டேட்!

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணியில் இப்போது புதிதாக 12th man என்ற புதிய படம் உருவாகியுள்ளது. முந்தையப் படங்களைப் போலவே இதுவும் ஒரு திரில்லர் படமாகவே உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துககான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.