1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (07:43 IST)

கண்ட கண்ட படங்களை எல்லாம் எடுக்குறாங்க… ஆயிரத்தில் ஒருவன் 2 வுக்கு எவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கு தெரியுமா? – மோகன் ஜி

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீஸானது.இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன.  

முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் வசூல் தொடர்சரிவை சந்தித்துள்ளது.

இதையடுத்து திரையுலகில் இருந்தே இந்தியன் 2 படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. திரௌபதி மற்றும் பகாசுரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி “கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிடுங்கள். அந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன பெரிய நிறுவனமோ” என அங்கலாய்த்துள்ளார்.