1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (09:50 IST)

AK61 ஃபர்ஸ்ட் லுக் வரும்போது என் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் விடுவேன்? – இயக்குனர் மோகன் ஜி

Mohan G
அஜித்தின் 61வது படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் வெளியாவது குறித்து இயக்குனர் மோகன் ஜி ஆர்வமுடன் காத்திருக்கிறார்.

நடிகர் அஜித் – இயக்குனர் எச்.வினோத் இணையும் மூன்றாவது படம் ஏகே61. இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தையும் அஜித்தின் முந்தைய இரண்டு படங்களை தயாரித்த போனிக்கபூரே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களோடு ரசிகராக இயக்குனர் மோகன் ஜியும் இந்த அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்.


பகாசூரன் என்ற படத்தை இயக்கி வரும் மோகன் ஜி, நடிகர் அஜித்தின் ரசிகரும் கூட. இந்நிலையில் மோகன் ஜி நேற்று தனது பகாசுரன் படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுற டைம் சொல்லுங்க போனிக்கபூர் சார். அதற்கேற்றாற்போல எனது பகாசுரன் முதல் சிங்கிள் ரிலீஸையும் மாத்திக்குவேன். இன்று எனக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.