ஓடிடியில் வெளியாகி கவனத்தைக் குவிக்கும் ‘மாடர்ன் லவ்- சென்னை’ ஆந்தாலஜி!
சமீபகாலமாக ஓடிடிகளின் வரவால் ஆந்தாலஜி என்ற வகை தமிழில் அதிகமாகி வருகிறது. புத்தம் புதிய காலை, குட்டி லவ் ஸ்டோரிஸ் மற்றும் நவரசா என அடுக்கடுககாக வெளியாகினாலும் எதுவும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு மாடர்ன் லவ்- சென்னை என்ற ஆந்தாலஜி உருவாகி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகியுள்ளது. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்த ஆந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆந்தாலஜியில் உள்ள படங்களை தியாகராஜன் குமாரராஜா, ராஜு முருகன், பாரதி ராஜா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.