Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘உங்களை மிஸ் பண்றேன்’ – அஞ்சலியிடம் உருகிய ஜெய்


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:23 IST)
அஞ்சலியை மிஸ் செய்வதாக, அவரிடமே வெளிப்படையாக ஜெய் தெரிவித்துள்ளார்.  

 

 
ஜெய் – அஞ்சலி இருவரும் காதலிப்பதாக பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இருவருமே அதை மறுக்காத நிலையில், வாய் திறந்து வெளிப்படையாக சொல்லாமலும் மெளனம் காத்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக நடித்துவரும் ‘பலூன்’ படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் முடிவடைந்தது. கடைசி நாள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஜெய். 
 
அதற்கு பதிலளித்துள்ள அஞ்சலி, ‘கடைசி நாள் ஷூட்டிங் மிகவும் ஜாலியாக இருந்தது. படக்குழுவினரை மிஸ் பண்றேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு, ‘நானும், படக்குழுவினரும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். நம்முடைய காம்போ படத்தில் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் ஜெய். இருவரும் இப்படி வெளிப்படையாக கொஞ்சிக் கொள்வது ஏன் என கோடம்பாக்கத்தில் இப்போதே பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :