யோகி பாபு வீட்டு விசேஷத்தில் அமைச்சர் மா சுப்ரமண்யன்!
பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பின் சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விசாகன் என்று பெயரிட்டுள்ளனர்.
இதையடுத்து மகளின் பெயர் சூட்டு விழாவை வீட்டில் நடத்தினார் யோகி பாபு. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மா சுப்ரமண்யன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்..” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.